Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுச்சூழல் போராளி முகிலனைக் கண்டுபிடித்து தரக் கோரி கரூர் ஆட்சியரிடம் மனு

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (18:20 IST)
காணாமல் போன சூற்றுச்சூழல் போராளி முகிலனைக் கண்டுபிடித்து தரக் கோரி கரூரில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முகிலன் முகமூடி அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சுற்றுச் சூழல் போராளி முகிலன்.  கரூரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மணல் குவாரிகளை எடுத்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தவர் இதன் காரணத்தால் மணல் குவாரிகள் மூடப்பட்டன.  இதுமட்டுமல்லாது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தினார்.  இந்த போராட்டத்தின்போது,  போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினார்.  இந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக பல ஆதாரங்களை  வீடியோவாக கடந்த 10 தினங்களுக்கு முன்னர்  முகிலன் அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
அதன் பிறகு முகிலன் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக சென்னையில் ரயில் ஏறிய அவர் மதுரைக்கு வரவில்லை.  முகிலன் எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவில்லை.  இதையடுத்து,  காணாமல் போன் முகிலன் குறித்து தமிழக அரசும்,  காவல் துறையும் இதுவரை எந்தவித விளக்குமும் அளிக்கவி்ல்லை. 
 
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் முகிலனை கண்டுபிடித்து தர வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில்,  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில்,  சாமானிய மக்கள் நலக் கட்சி, அமராவதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று முகிலன் மூகமூடி அணிந்து வந்து காணாமல் போன முகிலனைக் கண்டுபிடித்து தரக் கோரி,  மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments