விவசாயியை கடித்த பாம்பு..! கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு..!!

Senthil Velan
வியாழன், 22 பிப்ரவரி 2024 (12:57 IST)
உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.  விவசாயியான இவர் தனது தோட்டத்து பகுதியில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த இரண்டரை அடி நீளமுள்ள அடையாளம் தெரியாத விஷப்பாம்பு இந்த விவசாயியை கடித்ததாக கூறப்படுகிறது.,
 
இந்நிலையில் தன்னை கடித்த பாம்பை பிடித்து சாக்கு பையில் வைத்தவாறு உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விவசாயி ஜெயராமனை கண்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றன.
 
முதலுதவி சிகிச்சை பெற்ற பின் எந்த பதற்றமும் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து விவசாயி உணவருந்திக் கொண்டிருததை பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்த்துறை உதவியுடன் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த வனத்துறையினரிடம் பாம்பை விவசாயி ஒப்படைத்தார். 

ALSO READ: மது போதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்தி கொலை..! தப்பி ஓடிய சித்தப்பாவுக்கு போலீசார் வலை வீச்சு..!
 
வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் போது பாம்பு விவசாயிகளின் நண்பன், அதை கொலை செய்ய கூடாது, பாம்பு கடித்தாலும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும் என தெரிந்தே அதை பிடித்து வந்தாகவும், பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டு விடும்படி விவசாயி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வீட்டுக் கடன் வட்டி குறையும்.. மகிழ்ச்சியான செய்தி..!

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments