Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா ஆட்சி காலத்தில் பெண்கள் நிலை உயர்ந்துள்ளது. - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (22:56 IST)
அம்மா ஆட்சி காலத்தில் பெண்கள் நிலை உயர்ந்து இருக்கிறது. எந்த திட்டமாக இருந்தாலும் பெண்களை மையமாக கொண்டே செயல்படுத்தப்பட்டன - கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு.
 
கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி திட்டம் மூலம் 1297 பயனாளிகளுக்கு திருமணத்திற்கு நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது. வருவாய் துறையின் மூலம் 564 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் நலத்திட்டங்கள், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீட்டுமனை பட்டா பெறுவது கனவாகவே இருந்து வந்தது. அம்மாவின் ஆசியோடு அம்மாவால் போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு பட்டாக்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா இல்லாத நிலை இருந்தது. அவற்றில் உள்ள சிக்கல்களை களைந்து அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று 604 பேருக்கு தனிப்பட்டா வழங்கப்படுகிறது. திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பெண் முதல்வராக இருந்ததால் தான், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 5 ஆண்டுகள் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி திட்டங்கள் மூலம் முழுமையாக வழங்கப்பட்டது. படிக்க கூடிய மாணவர்களுக்கு 14 வகையான பொருட்களை கொடுத்து வருகிறோம். இதனால் தேசிய அளவில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொரோனோ நிவாரண நிதி ஆயிரம் ரூபாய் வழங்கி, இலவசமாக அரிசி, பருப்புகள் வழங்கப்பட்டது. கொரனோவை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலம் தமிழகம். முதல்வரின் சீரிய நடவடிக்கை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் முயற்சியால் அதில் சாத்தியமாகியது. பொதுமக்கள் சிரமப்படுவதாக கூறி குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அம்மாவின் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கரூர் மாவட்டத்தில் 43000 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்தில் மனுக்களை பெற்று அவர்களுக்கும் தகுதியான நபர்களுக்கு உதவித் தொகை பெற்று கொடுக்கப்படும். அம்மா ஆட்சி காலத்தில் பெண்கள் நிலை உயர்ந்து இருக்கிறது. எந்த திட்டமாக இருந்தாலும் பெண்களை மையமாக கொண்டே இருக்க வேண்டும். அம்மா இல்லாத சூழ்நிலையிலும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு இன்னும் திட்டங்கள் வழங்க அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்