Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் வங்கியில் கைவரிசை காட்டிய திருடர்கள் ... ரூ. 5 கோடி நகை திருட்டு ...

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (13:21 IST)
திருச்சி சமயபுரம் பகுதியில்  இயங்கிவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமயபுரம் பகுதியில் இயங்கி வந்த பஞ்சாப் நேட்ஷனல் வங்கியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2 நாள் விடுமுறைக்கு பின்னர் வங்கியில் நடைபெற்ற திருட்டு தற்போது தெரியவந்துள்ளது.
 
வங்கியில் பின்பக்க சுவரை உடைத்து வங்கிக்குள் சென்ற திருடர்கள் வங்கியில் இருந்த 5 லாக்கர்களை கேஸ் வெல்டிங் மூலமாக உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
 
இதில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கேஸ் வெல்டிங் இயந்திரம்,சுத்தியல் , ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். சுமார் 5 கோடி மதிபுள்ள 500 சவரன் அளவிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகின்றன.
 
மேலும் வங்கிக்குச் சொந்தமான லாக்கர் எதுவும் உடைக்கப்படவில்லை. மாறாக தனி நபர்களின் நகைகள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருச்சி போலீஸார் விசாரணை நடத்தி , கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments