Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க கொடி! அகற்றிய வனத்துறை!

Prasanth Karthick
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (09:32 IST)

புனித ஸ்தலங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி செல்லும் மலை பாதையில் சிலர் ஏற்றி வைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வனத்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். இந்த மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் மலை ஏறி சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

 

தற்போது வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் மலை ஏறி சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியங்கிரியின் 7வது மலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறந்துக் கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று கொடியை அகற்றியுள்ளனர். தரிசனத்திற்கு சென்ற தவெக தொண்டர்கள் இந்த கொடியை எடுத்து சென்று அங்கு நட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுத் தொடர்பாக மலையடிவாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

 

ஆன்மீக மையமான வெள்ளியங்கிரியில் கட்சி கொடியை ஏற்றுவது சட்டப்படி குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments