Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டன்று கோயில்களைத் திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (15:28 IST)
புத்தாண்டு திருநாளில் நள்ளிரவு கோவில்களை திறக்க தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் புத்தாண்டன்று, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அன்றைய நள்ளிரவு கோவில் நடை திறக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களின் பாவங்கள் தீர்ந்து நல்வழி பிறக்க வேண்டுமென சுவாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோவில்களை இரவு முழுவதும் திறந்து வைப்பதால் பல அசம்பாவிதங்கள் நடைபெறுவதால், அதற்கு விதிக்கக் கோரி, அஸ்வத்தாமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் புத்தாண்டன்று நள்ளிரவு கோவில்களை திறக்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
 
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, உகாதி பண்டிகையன்று தான் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற வேண்டும். எனவேதிருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கோயில்களிலும் புத்தாண்டு பூஜைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

தமிழக மீனவர்கள் கைது.! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளர்.

தமிழக முழுவதும் பத்து லட்சம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளது -அமைச்சர் கே.என்.நேரு!

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க..! பிரதமர் மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments