Publish Date: Fri, 23 Oct 2026 (19:26 IST)
Updated Date: Fri, 23 Oct 2026 (19:29 IST)
நடிகர் விஜயை தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் பின்னாளில் அரசியலுக்கு வருவார்கள் என கணிக்கப்படுகிறது. இதில், தனுஷ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரின் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. 2028ம் ஆண்டு அரசியல் கட்சி அறிவித்து 2031 சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சியினர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன் தனுஷுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது ஊடகங்களின் யூகங்களாகத்தான் இருக்கிறது. அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, அதன் மீது கருத்து சொல்ல முடியாது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாடு அரசியலில் புதிதல்ல.. நடிகர் விஜய்தான் முதன் முதலில் இதை தொடங்கி வைத்தார் எனவும் சொல்ல முடியாது.. திரைப்பட கலைஞர்களுக்கு அல்லது கலை உலக தொடர்பு என்பது அரசியலில் தீவிரமாக இருக்கிறது.. எனவே திரைத்துறையிலிருந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதை புதிய வரவு என பார்க்க முடியாது என தெரிவித்திருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க