திமுக கூட்டணியில் பாமக வந்தால் நாங்கள் வெளியேறுவோம்: திருமாவளவன் உறுதி..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (12:33 IST)
திமுக கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சி  இணைந்தால், தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற முக்கிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி புதிதாக இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைவதாக இருந்தால், அதற்கு நாங்கள் எந்த இடையூறும் செய்ய மாட்டோம். அது அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், அதே நேரத்தில், திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி வந்தால், நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம். 
 
வரும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு எங்கள் பலத்தை காண்பிப்போம். இப்போது நான்கு எம்எல்ஏக்கள் இருக்கிறோம். ஒரு எம்எல்ஏ கூட வரவில்லை என்றாலும் பரவாயில்லை, கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம்," என உறுதியாக கூறியுள்ளார். அவரது இந்த வெளிப்படையான கருத்து திமுக கூட்டணிக்குள் புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments