தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து பாஜக தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை இன்று கவர்னராக பதவியேற்கின்றார்
இந்த நிலையில் தமிழிசைக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை என்றும், துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். துடிப்புடன் செயல்படும் தமிழிசை என்று இன்று கூறும் திருமாவளவன் தான் கடந்த காலங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாஜக என்ன செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு கவர்னர் பதவி கொடுத்திருப்பதை தமிழர் என்ற வகையில் பாராட்டுவதே ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.