தவெக ஆளும் கட்சி... கஷ்டமாத்தான் இருக்கு!. கட்டிப்பிடித்து உருளணுமா!.. திருமா கோபம்!...

Webdunia
திங்கள், 6 ஜூலை 2026 (08:06 IST)
கடந்த சில தேர்தல்களாகவே விடுதலை சிறுத்தை கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது., ஆனால் விசிக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் திமுக அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் விசிக திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

ஆனால், தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்று ஆட்சி அமைத்து விட்டது. அதுவும் திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை தவெக அமைத்திருக்கிறது. அதோடு அதில் விசிக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறது. விசிக எம்.எல்.ஏ வன்னியர்சுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது..

ஒருபக்கம், விசிக தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறதா? அல்லது தவெக கூட்டணியில் இருக்கிறதா? என்பது தெளிவாக புரியாத நிலை இருக்கிறது. ஏனெனில், இதுவரை தனது நிலைப்பாட்டை திருமாவளவன் அறிவிக்கவில்லை.. அதேநேரம் சமீபத்தில் தவெக நடத்திய கூட்டணி மாநாட்டில் விசிக கலந்து கொண்டது.

இந்நிலையில் விசிக விருது வழங்கும் விழாவில் நேற்று பேசிய திருமாவளவன் ‘திமுக கூட்டணியில் இல்லை என நாங்கள் சொல்லவில்லை. திமுக கூட்டணியில் விசிக இல்லை என ஸ்டாலின்தான் கூறியிருக்கிறார்.. நாங்கள் சொல்லவில்லை..  தவெக ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லைதான். ஏனென்றால் நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம்.. எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை என தவெகவை விமர்சித்திருக்கிறோம்.. இப்போது ஆட்சியில் பங்கு என்றதும் கட்டிப்பிடித்து உருள முடியுமா?’ என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments