Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடவடிக்கை உறுதி, திருநாவுக்கரசர்: எதையும் சந்திக்க தயார், விஜயதரணி

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (17:10 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சட்டசபையில் திறந்து வைத்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ விஜயதரிணி மட்டும் ஆதரவு தெரிவித்தார். சட்டமன்றத்தில் ஒரு பெண் தலைவரின் படம் ஏன் இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய விஜயதரிணி, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ராகுல், ஸ்டாலின் போன்றவர்கள் சென்று பார்த்தார்களே, அப்போதெல்லாம் அவர் குற்றவாளி என்று தெரியவில்லையா? என்று கேட்டார்

இதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், 'விஜயதரணி பேசுவது முறையல்ல சரியல்ல. விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ”என அவர் தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும், நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் கருத்து கூறிய விஜயதரிணி, 'ராகுல் குறித்து பேசியதற்கு காங்கிரஸ் கட்சி தலைமைக்கு விளக்கம் அளிக்கத் தயார் என்றும், எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments