Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே குடும்பம்!. 3 பேர்.. 3 கட்சி.. 3 தொகுதியில் போட்டி!.,. தேர்தல் அக்கப்போரு!...

Advertiesment
adhav arjuna
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா சில தேர்தல்களில் திமுகவுக்காக வேலை செய்திருக்கிறார். அதன்பின் விடுதலைச் சிறுத்தை கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரசியல்வாதி, தேர்தல் வியூக வகுப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர் ஆதவ் அர்ஜுனா. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், இந்திய கூடைப்பந்து சமயத்தில் தலைவராகவும் இருக்கிறார்.அதேபோல் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்கிற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனரும் இவர்தான்.,

விடுதலை சிறுத்தை கட்சியில் துணை பொதுச் செயலாளராக இருந்தார். அதன்பின் திமுகவை விமர்சித்ததால் இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். தற்போது தவெகவில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுகிறார். ரஜினியை பற்றி ஒரு கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி பின் மன்னிப்பு கேட்டார்.. விஜய் போலவே இவரும் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியிலும் இவர் போட்டியிடுகிறார்..

ஒருபக்கம் இவரின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஐஜேகே வேட்பாளராக புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் களமிறங்குகிறார். அதேபோல் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் அதாவது மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் லால்குடியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.. இப்படி ஒரே குடும்பத்தில் மூணு பேர், 3 கட்சி மற்றும் 3 மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி செஞ்ச அதே தப்பு!. விஜய் கட்சியை கலைத்துவிடுவது நல்லது!.. அமீர் கோபம்!..