ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய போது தான் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும் அண்ணாமலை தான் முதல்வர் வேட்பாளர் என தன்னிடம் கூறியதாக துக்ளக் குருமூர்த்தி கூறியுள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை குறித்து ரஜினிகாந்த் தன்னிடம் கூறிய போது அண்ணாமலை யார் என்று கூட தனக்கு தெரியாது என்றும் அவர் அப்போது கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணி கொண்டு இருந்தார் என்றும் கூறிய ஆடிட்டர் குருமூர்த்தி, அரசியல் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக அண்ணாமலை இருக்கிறார் என்றும் அவர் அரசியலுக்கு மட்டும் வராமல் இருந்தால் இந்நேரம் நிம்மதியாக இருந்திருப்பார் என்றும் அரசியலுக்கு வந்ததால் நிம்மதியை இழந்து கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் நாணயம் உழைப்பில் நம்பிக்கை துணிவு ஆகிய அத்தனை குணங்களும் அண்ணாமலையிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ண்ணாமலை தான் முதல்வர் வேட்பாளர் என ரஜினிகாந்த் கூறிய ரகசியத்தை இதுவரை தான் சொல்லாமல் வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.