Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக – விசிக கூட்டணி – திருமாவளவன் பேச்சால் சர்ச்சை !

Webdunia
புதன், 8 மே 2019 (09:03 IST)
திமுக மற்றும் விசிக ஆகியக் கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு வரும் நிலையில் சட்டமன்ற தேர்தலிலும் இதேக் கூட்டணி நிலைக்கும் என இப்போதே சொல்லமுடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலானக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்திலும் விழுப்புரம் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டுள்ளது.

தேர்தல் முடிந்தபின்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள திருமாவளவன் ‘ எங்கள் கூட்டணி தலித் வாக்குகளை முழுமையாகப் பெற்றுள்ளது. பாஜக மற்றும் பாமக இடம்பெற்றுள்ளதால் அதிமுக வின் தலித் வாக்காளர்களும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு வேறுபாடு உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே பொது நோக்கமாக இருந்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெரியக் கட்சியல்ல என்பதால் முதன்மைக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக முடிவுகளைப் பொறுத்தே கூட்டணி அமையும். நாங்கள் வளர்ந்து வரும் கட்சி என்பதால் பல காரணிகளைக் கொண்டே கூட்டணி அமையும்.’ எனக் கூறியுள்ளார்.

இதனால் திமுக – விசிக இடையிலானக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்குத் தொடராது என்பது போன்ற சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் உருவாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments