Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (06:26 IST)
ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவிருந்த திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவு காரணமாக காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி தேர்தல் நடத்தவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் கஜா புயல் நிவாரண பணிகள் இந்த இடைத்தேர்தலால் பாதிக்கும் என திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கருத்து தெரிவித்தன

இதனால் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் சற்றுமுன் திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் திருவாரூர் தொகுதி மக்கள் ஏமாற்றமும், அரசியல் கட்சி தலைவர்கள் கள் நிம்மதியும் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments