Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஐடி நிறுவனங்கள் இயங்கலாமா? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (19:02 IST)
சென்னையில் ஐடி நிறுவனங்கள் இயங்கலாமா?
சென்னையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் 10 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்றும், ஐடி நிறுவனங்களின் ஊழியர்களுக்கான வாகன சேவையை அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஐடி நிறுவனங்களை பொருத்தளவில் இயங்கும் என்ற அறிவிப்பு இல்லாமல் இருந்தது. 
 
இந்த நிலையில்தான் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அவசிய தேவை இல்லாமல் ஊழியர் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஊழியர்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இதனையடுத்து சென்னையில் விரைவில் ஐடி நிறுவனங்கள் செயல்பட தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments