Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் வரும் போது எழுந்து நிற்கவேண்டுமா?!.. சட்டமன்ற விதி சொல்வது என்ன?...

Advertiesment
udhyanidhi stalin
இன்று சட்டசபையில் பேசியன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ‘முதல்வர் அவைக்கு வரும்போது எதிர்கட்சிதலைவர் உதயநிதி எழுந்து மரியாதை செய்வதில்லை. அவருக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள் என ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலடி கொடுத்தார். இது திமுக எம்.எல்.ஏக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் சொன்ன கே.என்.நேரு ‘முதல்வர் வரும்போது எழுந்து நிற்பது அவரவர் விருப்பம். தளபதி ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது அப்போதைய எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி எழுந்து நின்று வணக்கம் சொன்னது இல்லை’ என கூறினார்.

இந்நிலையில்தான், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குறிப்புகள் என்ன சொல்கிறது என பார்ப்போம்.

சட்டமன்ற உறுப்பினர் அவைக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் தனது இருக்கைக்கு செல்லும் முன்பும் சபாநாயகர் நாற்காலியை நோக்கி வணங்க வேண்டும்.

உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து அவையின் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும்.

முதலமைச்சர் அல்லது எந்த அமைச்சர் அவைக்குள் வ்வரும்போது பிற உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும் என எந்தவொரு விதியும் இல்லை. முதல்வர் அவைக்கு வரும்போது எழுந்து நிற்பது முழுக்க முழுக்க அவரவரின் சுயவிருப்பத்தை பொறுத்தது.

சபாநாயகர் அவையை தொடங்குவதற்கு உள்ளே நுழையும் போதும், அவர் எழுந்து நின்று பேசும் போதும் அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்...

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் வரும்போது அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை உடனே திறக்க வேண்டும்.. கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..