Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 நாட்களுக்கு பின் இன்று கூடும் சட்டப்பேரவை!.. முதல்வர் துறைகளின் மீது விவாதம்!....

Advertiesment
joseph vijay
தமிழகத்தில் 2026 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது முதலே சட்டப்பேரவை நிகழ்வுகள் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் சட்டசபையில் இருந்த போது இல்லாத அளவுக்கு தற்போது  சட்டசபை சூடு பிடித்திருக்கிறது.

ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடி நிர்மல் குமார் போன்றவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். தவெக மீது எப்படியாவது குற்றச்சாட்டை வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தினமும் முயன்று வருகிறார்.

ஆனால் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார், ரமேஷ், என்.ஆனந்த் போன்றவர்கள் அந்த பாலை திருப்பி திமுக மீது அடித்து விடுகிறார்கள். தவெக மீது சட்டசபையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனங்களை வைக்கிறார்.. அதற்கு அவர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அவ்வப்போது முதல்வர் விஜயும் எழுந்து பேசுகிறார். கடந்த வாரம் சட்டசபை மிகவும் பரபரப்பாக செயல்பட்டது இருவரும் பரஸ்பரம் பல புகார்களை மாறி மாறி கூறிக் கொண்டனர். இந்நிலையில்தான் இரண்டு நாட்கள்  விடுமுறைக்கு பின் இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது..

முதலமைச்சர் விஜய் கவனித்து வரும் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மாநில கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடக்கவிருக்கிறது. எனவே இன்றும் அனல் பறக்கும் விவாதங்கள் சட்டசபையில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் இதை பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

75 நாடுகளுக்கு விசா வழங்குவதை தடை செய்த அதிபர் டிரம்ப்.. தடையை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்...