Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தமிழக பாஜக தலைவர் யார்? நாளை அறிவிப்பு என தகவல்!

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (06:37 IST)
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன், சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து புதிய தமிழக பாஜக தலைவர் யார்? என்ற கேள்வி கடந்த சில நாட்களாக எழுந்துள்ளது.
 
புதிய தமிழக பாஜக தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா,  சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாஜக இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி. முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி. ராகவன், எஸ்.வி.சேகர் ஆகியோர் பெயர்கள் பட்டியலில் உள்ளனர். இதுபோக ரஜினிகாந்த் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி தமிழக பாஜக புதிய தலைவர் யார்? என்பது அறிவிக்கப்படுமென டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பாஜக தலைவரை தேசிய தலைவர் அமித்ஷா தேர்வு செய்துவிட்டதாகவும், அவர் யார்? என்பது நாளை தெரியும் என்றும் கூறப்படுகிறது
 
பாஜக வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவலின்படி வானதி சீனிவாசன் அல்லது கே.டி.ராகவன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments