Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பயணம்: மேலும் 450 விரைவு பேருந்துகளில் முன்பதிவு ஆரம்பம்!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:01 IST)
தீபாவளிக்கு ஊருக்கு செல்ல அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு முன்னரே முடிந்துவிட்ட நிலையில், மேலும் 450 விரைவு பேருந்துகளை முன்பதிவுக்கு அனுமதித்துள்ளது தமிழக அரசு.

எதிர்வரும் அக்டோபர் 27 நாடெங்கிலும் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் சென்னை உட்பட பல நகரங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளார்கள். தீபாவளிக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளது.

தீபாவளிக்கு முன்பதி செய்து ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் 492 பேருந்துகளில் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதில் சில மணி நேரங்களிலேயே முன்பதிவுகள் முடிவடைந்தது. இதனால் மக்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் ஊர்களுக்கு செல்ல ஏற்றவாறு மேலும் 458 பேருந்துகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் பாதுகாப்பாக ஊர்களுக்கு சென்று வரலாம் என கூறப்படுகிறது. இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலோ அல்லது கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம் பேருந்து நிலையங்களிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments