Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் - சீன அதிபரின் வருகையை முன்னிட்டு பேனர்: அனுமதி தருமா நீதிமன்றம்?

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:26 IST)
பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த மாதம் பலியானதையடுத்து அரசியல் தலைவர்களும் நடிகர்களும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தங்கள் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
 
இந்த நிலையில் இம்மாதம் 11ம் தேதி சீன அதிபர் இந்தியாவுக்கு வருகை தருகிறார். சீன அதிபரும் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளனர். மேலும் மாமல்லபுரத்தில் நடைபெறும் முக்கிய பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
இதனை அடுத்து சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை மேற்பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஆகியோரின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.


மேலும் தமிழக அரசு மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் ஆணை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பேனர் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று கூறும் தமிழக அரசே பேனர் வைக்க அனுமதி கேட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

அடுத்த கட்டுரையில்
Show comments