Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் 6 ஆயிரம் குடியிருப்புகள்! – குடிசை மாற்று வாரியம் பலே அறிவிப்பு!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (11:44 IST)
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் 6 ஆயிரம் குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் தொடர்ந்து சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குடிசைமாற்று வாரிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையில் குடியிருப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ.950 கோடி செலவில் சுமார் 6,000 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கலில் குடியிருப்புகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments