Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (07:05 IST)
மேகதாது விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது
 
இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் உரிமை இயல் முறையீட்டு மனுவை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
தமிழகம், கர்நாடகம், ஆகிய இரண்டு மாநிலங்களிலும் புதிய முதல்வர் பதவி ஏற்ற உள்ளதை அடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments