Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னார்வலர்கள் பொருட்கள் தர அரசு தடை: மீறினால் நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (16:47 IST)
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் தனியாக நிவாரணப் பொருட்கள் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டொர் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 14 வரை இருக்கும் ஊரடங்கு அதன் பின்னர் நீட்டிக்கப்படுமா என்பதை பிரதமர் அறிவிப்பிற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  
 
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல தன்னார்வலர்கள் நிவாரண பொருடகளை வழங்கி உதவ் வந்ததனர். இந்நிலையில், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் தனியாக பொருட்கள் வழங்க அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
சமைத்த உணவுகள், நிவாரணப் பொருட்களை தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் தனியாகவழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது. சில நபர்கள், அரசியல் கட்சிகள், கட்சியினர் நேரடியாக பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும்.
 
அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகர ஆணையரிடம் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments