போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்
இந்த கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை என்பதும், போனஸ் தொகை குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர் இதனால் நாளை முதல் பேருந்து ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் நாளை முதல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது