Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதார பணியாளர்கள் பணிக்கு 7,296 பணியிடங்கள்! – மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (08:20 IST)
தமிழகம் முழுவதும் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையிலான சுகாதார பணியாளர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் புதிய கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம் நிரப்ப மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழக அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு 4,848 இடங்களும், பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு 2,448 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments