Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த பாடம் நடத்துறது.. எதை விடுறது?? – அறிவிப்பு இல்லாததால் குழப்பத்தில் ஆசிரியர்கள்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (12:46 IST)
கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் பாடங்கள் குறைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் பொருட்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை பள்ளிகளுக்கு கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. வாட்ஸப் மூலமாக வந்த அறிவிப்பின் அடிப்படையில் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்து வருவதாகவும், அதிலும் பாடநூலின் சில பக்கங்களை நீக்க தகவல் உள்ளதாகவும், குறிப்பிட்ட பாடம் என்பது பற்றி இல்லாததாலும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முறையான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி துறை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments