Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் கடந்தாலும் மழை தொடரும்… இந்த மாவட்ட மக்களே உஷார்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (10:37 IST)
புயல் கரையை கடந்த பின்னரும் மழை தொடரக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவாகியு மாண்டஸ் புயல் நேறிரவு இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் தாக்கத்தால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் நால்வர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சேத விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புயல் கரையை கடந்த பின்னரும் மழை தொடரக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதை தவிர்த்து சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தென்காசி, நெல்லை, குமரியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments