Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:43 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானதை அடுத்து இந்த தேர்வை எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு உதவி ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நடைபெற்றது
 
இந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ஆன்லைனில் அந்த தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முடிவுகளை பார்த்து வருகின்றனர்
 
மேலும் டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வு நடைபெறும் தேதி குறித்த தகவலும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுகள் மே மாதம் 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு செய்துள்ளது
 
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முதன்மைத் தேர்வுகளை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments