Publish Date: Thu, 06 Aug 2026 (11:13 IST)
Updated Date: Thu, 06 Aug 2026 (11:14 IST)
கடந்த பல மாதங்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டியது. தற்போது வரை அதிலிருந்து குறையவில்லை.
நேற்று மாலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 7 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது ஒரு கிராம் தங்கத்தின் விலை 13,480 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 270 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,750 க்கு விற்பனை செய்யப்படுகிறது..
கடந்த பல நாட்களாகவே வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் மட்டும் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க