Publish Date: Thu, 20 Oct 2022 (07:33 IST)
Updated Date: Thu, 20 Oct 2022 (07:34 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 5 மாதங்களாக உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த போதிலும் இந்தியாவில் வரும் டிசம்பர் வரை பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
போதுமான அளவுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருப்பதால் டீசல் விலை இந்தியாவில் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது