Publish Date: Mon, 07 Nov 2022 (08:01 IST)
Updated Date: Mon, 07 Nov 2022 (08:02 IST)
கடந்த 169 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது
மேலும் வரும் டிசம்பர் முதல் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்