இன்று ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மரம் விழுந்து சுற்றுலா சென்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலை முதலே கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை ரெட் அலெர்ட் காரணமாக ஊட்டியிலும் சுற்றுலா பகுதிகள் முழுவதும் மூடப்பட்ட நிலையில், மக்கள் பைன் மரக்காடுகள் போன்றவற்றிற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மழை பெய்திருந்த நிலையில் அவர்கள் பைன் காட்டை சுற்றி பார்க்க சென்றபோது திடீரென ஒரு மரம் சரிந்து விழுந்துள்ளது. அது அந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆதிதேவ் மீது விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K