குடியரசுத் தின அணிவகுப்பு ஒத்திகை நடப்பதால் மெரினா கடற்கரை சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற 20, 22, 24 ஆகிய தேதிகளில் குடியரசுத் தின அணிவகுப்பு ஒத்திகையும், 26 ஆம் தேதி குடியரசுத் தின அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால் மெரினா கடற்கரை சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
காலை 6 மணி முதல் அணி வகுப்பு முடியும் வரையில் அதாவது காலை 9.30 மணி வரையில் காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
அடையாறு பகுதியில் இருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் வாகனங்கள் லஸ் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும்.
அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.
அதோடு டெல்லி குடியரசு தின விழாவில் மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து இதன் அணிவகுப்பும் நடைபெறும்.