Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை செல்லும் ரயில்கள் ரத்து..! எந்தெந்த ரயில்கள்? – முழு விவரம்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (09:30 IST)
திருநெல்வேலி ரயில்வே யார்டு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



திருநெல்வேலி ரயில்வே யார்டு பகுதியில் உள்ள பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன் காரணமாக நெல்லை – திருச்செந்தூர் இடையேயான முன்பதிவில்லா சிறப்பு ரயில் மற்றும் திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி இடையேயான முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில் – தாம்பரம் இடையே செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் இன்று விருதுநகரில் இருந்து புறப்படும். பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில் இன்று பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் இன்று திருச்செந்தூரில் இருந்து கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments