Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோல் ரேட்டில் சீன் காட்டிய அண்ணனின் விழுது: சட்டை கிழிந்து ஓடிய துயரம்!!

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (12:01 IST)
சுங்க சாவடியில் அடாவடியில் ஈடுபட்ட நாம் தமிழர் வினோத்குமார் என்பவரை சுங்க சாவடி ஊழியர்கள் அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக களம் கண்டவர் வினோத்குமார். இவர் சமீபத்தில் புதுக்கோட்டைக்கு செல்லும்போது இடையே இருந்த சுங்க சாவடியில் தன்னை நாம் தமிழர் வேட்பாளர் என அடையாளப்படுத்திக்கொண்டு கட்டணம் செலுத்த மறுத்துள்ளார். 
 
இதே போல, புதுக்கோட்டையில் இருந்து திரும்பி வரும் போதும் கட்டணம் கட்ட மறுத்து உருட்டுக்கட்டையை எடுத்து அடாவடியில் ஈடுப்படுள்ளார். இதனால், கடுப்பான சுங்க சாவடி ஊழியர்கள் 15 பேர் வினோத்குமாரை வளைத்து பிடித்து அடித்து துவைத்துள்ளனர். 
 
இதில் சட்டை கிழிந்த நிலையில் வினோத்குமார் தப்பியுள்ளார். இதன் பின்னர் சுங்க சாவடி ஊழியர்கள் தரப்பில் போலீஸாரிடம் இது குறித்து புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வினோத்குமாரும் 15 ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments