Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சய்லெண்ட்டாய் இருந்து வய்லெண்டாய் ஜெயித்த டிடிவி!!

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:59 IST)
பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளை தோற்கடித்து அமமுக ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் அதிக வெற்றிகளை கண்டுள்ளது. 
 
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது.   
 
இதற்கு அடுத்து யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கனிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 95 இடங்களை அமமுக பெற்றுள்ளது. 
 
அமமுகவின் இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக பார்கப்படுகிறது ஏனெனில் திமுக, அதிமுகவை அடுத்து வெற்றி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை அமமுக பெற்றுள்ளது. அதோடு, தனிப்பட்ட முறையில் பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளை அதிக வெற்றி எண்ணிக்கையை அமமுக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
மக்களவைத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கடும் சறுக்கலை சந்தித்த அமமுக தற்போது மோசமாக தோற்காமல் நல்ல நிலையில் வெற்றிகளை குவித்து வருவது அமமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments