எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் கண்டனம்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கார் மீது செருப்பு வீசியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தான் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் என்பது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அதிகாலையில் வீடு புகுந்து கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்! வன்முறையைத் தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை?
இது வண்மையாக கண்டிக்கத்தக்கது. கழக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்ட முயற்சிக்கும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு தமிழக காவல்துறை துணை போவதன் மர்மம் என்ன? என கேட்டுள்ளார்.