Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக்கட்சி முனைப்பில் டிடிவி தினகரன்?

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (17:47 IST)
சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என கூறினாலும் அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது. 
 
ஆர்.நகர் இடைதேர்தலின் வெற்றிக்கு பிறகு அதிமுகவை தன் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என எண்ணிய தினகரனுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முட்டுகட்டையாய் நின்ற்னர். தினகரன் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். 
 
இருப்பினும், டிடிவி தினகரன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும், 6 மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலையும் என்று சொல்லி வருகிறார். 
 
இதற்கிடையே குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. 
 
மேலும் தினகரன் கட்சிக்கு கோரும் பெயர்களில் ஒன்றை ஒதுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து டிடிவி. தினகரன் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதிய கட்சி தொடங்கும் முனைப்பில் டிடிவி. தினகரன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments