Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா சமாதியோடு சமாதியான சசிகலா சபதம்: அதிமுக இனி ஈபிஎஸ் - ஓபிஎஸ் கையில்?

Advertiesment
டிடிவி தினகரன்
, புதன், 3 ஜூலை 2019 (11:51 IST)
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் மேற்கொண்ட சபதத்தை சமாதியாக்கி விட்டார் டிடிவி தினகரன் என பேச்சுக்கள் எழுந்துள்ளது. 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் மேற்கொண்ட 3 சபதத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. 
 
சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சபதம் எடுத்தார். மேலும், அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும். 
டிடிவி தினகரன்
என்னை எந்த கூட்டில் அடைத்தாலும் கட்சி வளர்ச்சியை நோக்கித்தான் எனது எண்ணம் இருக்கும். என்னைத்தான் அடைக்கலாமே தவிர எனது மனதை அடைத்து வைக்க முடியாது. என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது எனவும் தெரிவித்ததாக அப்போது அதிமுக தரப்பில் கூறப்பட்டது. 
 
ஆனால் அதன் பின்னர் அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஓரம் கட்டப்பட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒன்றிணைந்து ஆட்சியையும் கட்சியையும் நிர்வாகித்து வருகின்றனர். டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை துவங்கி இப்போது அந்த கட்சியில் இருந்து அனைவரும் விலகி அதிமுக அல்லது திமுக பக்கம் செல்கின்றனர். 
டிடிவி தினகரன்
நிலைமை இப்படியே போனால் டிடிவி தினகரன் உருவாக்கிய கட்சியில் அவர் மட்டுமே இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோடு, தினகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கடைசி வரை சசிகலா மேற்கொண்ட சபதம் நிறைவேறாது எனவே தெரிவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிலுக்குள் மருமகளுடன் சென்ற மாமனார் … தீட்டு என அவமானப்படுத்திய மக்கள் – பின்னணி என்ன ?