கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து குறித்த வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதாக புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் வழியாக சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தமிழக - ஆந்திர எல்லையில் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது லூப் லைனில் சென்று முன்னாள் நின்ற சரக்கு ரயிலில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தது. ஆனால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஆரம்பத்தில் சிக்னல் கோளாரே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் 13 ரயில் நிலைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரயில் விபத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.
ஆனால் விபத்து நடந்த இடத்தில் தண்டவாள கம்பிகளின் நட்டு, போல்டு கழற்றப்பட்டிருப்பது என்.ஐ.ஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ரயில் விபத்தில், ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பதாக புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K