வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்றே தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
சென்னை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன் கூட்டியே தொடங்கி விட்டதாக தெரிகிறது
இந்த நிலையில் நேற்று இரவு முதல் தூத்துக்குடி பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது
வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு முன் கூட்டியே தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்சனையும் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது