Publish Date: Sat, 10 Oct 2026 (10:43 IST)
Updated Date: Sat, 10 Oct 2026 (10:45 IST)
அதிமுக எம்.ஏல்.ஏக்கள் 7 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தால் அந்த தொகுதிகள் காலியாக இருக்கிறது. அதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.
தொடக்கம் முதலே இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வந்தது. முடிவில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது. இதில், 2026 சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது மதுராந்தகம் தொகுதியில் தவெக அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
2026 தேர்தலில் தவெக மதுராந்தகம் தொகுதியில் 62090 வாக்குகள் பெற்ற நிலையில் இடைத்தேர்தலில் 72,491 வாக்குகளை பெற்றது. அதாவ்து 10401 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது. அதாவது, பொதுத்தேர்தலில் 31.45 சதவீத வாக்குகளை பெற்ற தவெக இடைத்தேர்தலில் 40.04 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல், 59838 வாக்குகளை பெற்ற திமுக இடைத்தேர்தலில் 52,704 வாக்குகளை பெற்றது. அதாவது 7134 வாக்குகளை திமுக இழந்துள்ளது.
அதேபோல், 68,284 வாக்குகளை பெற்ற அதிமுக இடைத்தேர்தலில் 46,045 வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது, 22,239 வாக்குகள் குறைவாக பெற்றுள்லது. அதேபோல், 4950 வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் 2307 வாக்குகளை பெற்றுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க