Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை!.. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்!..

Advertiesment
vijay
தமிழகத்தில் தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் கடந்த 6ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவுக்கு முக்கியம் என்பதால் முதல்வர் ஜோசப் விஜய் பொதுக்கூட்டத்தில் பேசியதோடு மட்டுமல்லாமல் அந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். ஒருபக்கம் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் செய்தன.

இந்நிலையில், 6ம் தேதி பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருக்கிறது..

மதுராந்தகம் தொகுதியில் தவெக 67 வாக்குகளும், திமுக 55 வாக்குகளும், அதிமுக 28 வாக்குகளையும் பெற்றிருந்தது. அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக 72 வாக்குகளையும், திமுக 68 வாக்குகளையும், அதிமுக 56 வாக்குகளையும் பெற்றிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்ப் அறிவிப்பால் ஐடி நிறுவனங்கள் அதிர்ச்சி.. இனிமே அமெரிக்காவில் செட்டிலாக முடியாது!....