Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மழை எதிரொலி: பெங்களூரு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:40 IST)
சென்னையில் நேற்றைய திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ததால் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததை அடுத்து சார்ஜா துபாய் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள்  தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மழை ஓரளவு ஓய்ந்த பிறகு இரண்டு விமானங்களும் பெங்களூரில் இருந்து மீண்டும் சென்னை திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பை, துபாய், பாரிஸ் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாக கிளம்பியது என்று  தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் இன்று காலை 8:30 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதை அடுத்து இனி கிளம்பும் விமானங்களும் தாமதமாக கிளம்ப அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள ரன்வேயில் உள்ள மழை நீரை அகற்றும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments