Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார், இது உங்க 100 ரூபாயா ? – ஒரு லட்சத்தைத் திருடிச்சென்ற இளைஞர்கள் !

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (12:18 IST)
சென்னை மாதவரத்தில் முதியவர் ஒருவரை நூதனமாகத் திருடிச் சென்றுள்ளனர் இரண்டு இளைஞர்கள்.

மாதவரம் அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தன் நிறுவனத்தில் இருந்து வந்த செட்டில்மெண்ட் பணத்தை எடுக்க புழல் கேம்ப் அருகிலுள்ள இந்தியன் வங்கிக்கு நேற்றுச் சென்றார். பணத்தை எடுத்த அவர் பணத்தை தனது வண்டியின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அவர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அருகில் வந்த இரண்டு இளைஞர்கள் சீனிவாசனிடம் ‘ சார் அங்கே கிடப்பது உங்கள் 100 ரூபாயா ?.’ எனக் கேட்டு தூரமாகக் கைக்காட்டியுள்ளனர். அவர்  இறங்கி சென்று அந்த இடத்தில் பணம் எதுவும் இல்லை. அப்போது திரும்பிப் பார்த்தபோது அந்த இளைஞர்கள் வேகமாக மோட்டார் பைக்கில் சென்றுவிட்டனர்.

இதனால் சந்தேகமடைந்து தனது பைக்கில் வந்து பார்த்தபோது பணத்தைக் காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் புழல் போலிஸாரிடம் அவர் புகார் கொடுக்க சிசிடிவி கேமராக்களை வைத்து திருடர்களின் முகத்தைப் போலிஸ் அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments