Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.கே.ஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது..!

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (11:18 IST)
எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது செங்கல்பட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வல்லஞ்சேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராசையா என்ற 31 வயது ஆசிரியர் மற்றும் காயேஷ்குமார் என்ற 40 வயது ஆசிரியர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு விளையாட்டு சொல்லி தருவதாக கூறி இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெற்றோர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் சுதாரித்து இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்