Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க நகைகளுக்குப் பதில் கவரிங் நகைகள் – ஜவுளிக்கடை திருட்டில் சிக்கிய பெண்கள் !

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:12 IST)
பன்ரூட்டிப் பகுதியில் உள்ள நகைக்கடையில் திருடிய இரண்டு பெண்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவநாதன் நகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடைக்குக் கடந்த 17 ஆம் தேதி வந்த இரு பெண்கள் நகை வாங்குவது போல பாசாங்கு காட்டி அங்கிருந்து தங்க நகைகளை திருடிவிட்டு கவரிங் நகைகளை வைத்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலிஸாரிடம் புகாரளித்தனர். போலிஸார் கடையில் இருந்த  சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் செல்வி மற்றும் ரத்னா ஆகிய இரு பெண்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 3 பவுன் நகைகளைத் திரும்ப பெற்றுள்ளனர்.

அதையடுத்து இரண்டு பெண்களிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இது போல பல இடங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments