திருப்பூர் பகுதியில் அதிக வருமானம் இன்றி கஷ்டப்படும் நடுத்தர மக்களை குறிவைத்த இரண்டு இளைஞர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரண்டாயிரம் தருவதாக கூறியுள்ளார். தாங்கள் ஒரு சமூக அமைப்பில் இருந்து வருவதாகவும் உதவி செய்யும் மனப்பான்மையுடன் இதை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
ஒருசிலர் ஆயிரம் ரூபாய் கொடுத்து இரண்டாயிரம் பெற்றாலும் ஒருசிலர் இந்த இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். இதில் ஹாரூன் என்பவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் செய்ய உடனடியாக விரைந்து வந்த போலீசார் இரண்டு இளைஞர்களையும் பிடித்து விசாரித்தனர்
விசாரணையில் சதீஷ் மற்றும் ராஜ்குமார் என்ற அந்த இரண்டு இளைஞர்கள் வீராணம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் 2 ஆயிரம் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து கள்ளநோட்டை அச்சடிக்க இருவரும் பயன்படுத்திய ஸ்கேனர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.