Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கொரோனா ஒழிப்புக்கான கையேடு''- அமைச்சர் மா.சுப்பிரமணியன் நூலை வெளியிட்டு உதயநிதி பாராட்டு!

Sinoj
சனி, 13 ஜனவரி 2024 (19:15 IST)
சென்னை 47 வது புத்தகக் கண்காட்சி நடந்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கொரோனா உடல் காத்தோம், உயிர் காத்தோம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்த நூலை வெளியிட்ட அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பெருந்தொற்றை அறிவியலின் துணையோடு நம் கழக அரசு முறியடித்த வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார் அண்ணன் மா.சு என்று பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’அரசின் மருத்துவத்துறை மட்டுமின்றி எழுத்துத் துறையிலும் முத்திரைப் பதித்து வரும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு.  மா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய “கொரோனா - உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்” என்னும் புத்தகத்தையும், அதன் ஆங்கில பதிப்பான "Corona Chronicles"-ஐயும் சென்னை புத்தகக் காட்சியில் இன்று வெளியிட்டோம்.

அவற்றை மூத்த பத்திரிகையாளர் திரு.என்.ராம் அவர்கள் மற்றும் தலை சிறந்த மருத்துவர் திரு.மோகன் காமேஸ்வரன் அவர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

2021-ல் கழக அரசு அமைந்த போது, நம் கண் முன் பெரும் சவாலாக கொரோனா 2- ஆம் அலை வேகமெடுத்து இருந்தது. அந்தப் பெருந்தொற்றை அறிவியலின் துணையோடு நம் கழக அரசு முறியடித்த வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார் அண்ணன் மா.சு அவர்கள்.

கொரோனா ஒழிப்புக்கான கையேடு என்று சொல்கிற வகையில் மிகச்சிறப்பான முறையில் இந்த புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ள அவருக்கு என் வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரியனார் கோவில் ஆதீனம் திருமண சர்ச்சை - மடத்தில் இருந்து வெளியேறியது ஏன்?

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடு..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments